ஊரக உள்ளாட்சி மானியத்தின் முதல் தவணை மத்திய அரசு ரூ.552 கோடி விடுவித்தது


ஊரக உள்ளாட்சி மானியத்தின் முதல் தவணை மத்திய அரசு ரூ.552 கோடி விடுவித்தது
x

ஊரக உள்ளாட்சி மானியத்தின் முதல் தவணை மத்திய அரசு ரூ.552 கோடி விடுவித்தது தமிழக அரசு தகவல்.

சென்னை,

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

15-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவீனங்கள் துறை, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியத்தின் முதல் தவணையாக ரூ.552.20 கோடி நிதியை விடுவித்துள்ளது.

இந்தத் தொகை 2022-23-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடாகும். இந்தத் தொகையை தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராமப் பஞ்சாயத்துகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 36 மாவட்ட ஊராட்சிகளுக்கு பகிர்ந்தளிக்க ஊரக மேம்பாட்டு ஆணையருக்கு அதிகாரம் வழங்கி அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story