ஜப்பான் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டிட பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் -மாணிக்கம் தாகூர் எம்.பி. பேச்சு


ஜப்பான் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டிட பணிக்கு  மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் -மாணிக்கம் தாகூர் எம்.பி. பேச்சு
x

ஜப்பான் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டிட பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

மதுரை

பேரையூர்

ஜப்பான் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டிட பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

பயணிகள் நிழற்குடை திறப்பு

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மத்தக்கரை, சின்னபூலாம்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வரத்துகால்வாய் பணி, 100 நாள் வேலை திட்ட பணிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். பின்னர் பேரையூர் அரசு மருத்துவமனை அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என்பது செங்கல் கற்களாக இருப்பதற்கு முழு காரணமாக இருப்பது மோடி அரசாகும்.

ஜப்பானுடைய நிதி வருகின்ற வரையிலே மதுரை எய்ம்ஸ் எந்த வேலையும் நடக்கப் போவதில்லை. 82 சதவீதம் அதாவது 1300 கோடி ரூபாய்க்கு மேல் ஜப்பான் அரசு கொடுக்க வேண்டும். ஜப்பான் அரசு எப்போது பணம் கொடுக்கிறதோ அதற்குப் பிறகுதான் எய்ம்ஸ் கட்டிடம் கட்டப்படும். எனக்குத் தெரிந்த வரை 2024 ஏப்ரல் வரை இந்த பணி தொடங்கப் போவதில்லை.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி

எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை மத்திய அரசு கொண்டுவர வேண்டுமென நினைத்தால், ஜப்பானுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மற்ற எய்ம்சை கட்டுவதற்கு எப்படி பணம் ஒதுக்கினார்களோ அதேபோல் இதற்கும் பணம் ஒதுக்க வேண்டும். ஆனால் மோடி தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல திட்டமும் வரவேண்டாம் என நினைப்பவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் இன்னும் செங்கற்களாகவே நிற்கிறது. இதற்கு முழு பொறுப்பும் மத்திய அரசு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேரையூர் பேரூராட்சி தலைவர் குருசாமி, மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர நாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் காமாட்சி, வட்டார தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story