ரெயில் விபத்துக்கு யார் காரணம் என்பதை மத்திய அரசு உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்: ஆ.ராசா எம்.பி.


ரெயில் விபத்துக்கு யார் காரணம் என்பதை  மத்திய அரசு உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்: ஆ.ராசா எம்.பி.
x
தினத்தந்தி 3 Jun 2023 2:29 PM GMT (Updated: 3 Jun 2023 2:42 PM GMT)

ரெயில்வேயில் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாக உள்ளதாக ஆ.ராசா எம்.பி. கூறியுள்ளார்.

சென்னை,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் விபத்து குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேட்டியளிக்கையில், ஒடிசா ரெயில் விபத்தால் மத்திய அரசு ஸ்தம்பித்துள்ளது. ரெயில் விபத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு தெரியவில்லை. ரெயில்வேயில் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாக உள்ளது.

மத்திய அரசு விளம்பரம் செய்வதிலேயே குறியாக உள்ளது. ரெயில் விபத்துக்கு யார் காரணம் என்பதை இதுவரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. ரெயில் விபத்துக்கு யார் காரணம் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.

ரெயில் விபத்து நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசா முதல் மந்திரியுடன் தொடர்புகொண்டு பேசினார். தமிழகத்தில் இருந்து அமைச்சர்களை அங்கேயே 5 நாட்கள் தங்கி நிவாரண பணிகளை கவனில்ல உத்தரவிட்டுள்ளார்.

ரயில் விபத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. ரெயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு அனைத்து நாவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story