சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தேசிய கொடி ஏற்றினார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தேசிய கொடி ஏற்றினார்.
சென்னை,
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சென்னை ஐகோர்ட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தேசிய கொடியை ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சில் ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் எஸ்.துரைசாமி, டி.ராஜா உள்ளிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் சென்னை ஐகோர்ட்டு கட்டிடம் கட்டப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஐகோர்ட்டு கட்டிடம் பொறிக்கப்பட்ட தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த தபால் தலையை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி வெளியிட மூத்த நீதிபதி எஸ்.துரைசாமி பெற்றுக் கொண்டார். .