மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கத்தில் தலைமை செயலர் ஆய்வு


மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் தலைமை செயலர் இறையன்பு ஆய்வுகள் மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

மாமல்லபுரம்:

இம்மாதம் 28ம் தேதி மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" துவங்குகிறது. இதில் பங்கேற்கும் 188 நாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அந்நாட்டு ஊடகவியலாளர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் வருகிறார்கள்.

ஒலிம்பியாட் போட்டிக்கு வரும் அனைத்து வெளிநாட்டு வீரர்களுக்கும் சுற்றுலாவாக மாமல்லபுரம் புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்சுனன்தபசு, வெண்ணை உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி காண்பிக்க, தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

இதை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். சாலையோரம் குப்பைகள் தேங்கம் இருக்ககூடாது, நகரம் முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும், மாடு, நாய், பண்றி போன்ற கால்நடைகள் நகரவீதியில் சுற்றக்கூடாது, முக்கியமாக கொசுத் தொல்லை, இருக்ககூடாது என பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தை தலைமை செயலர் இறையன்பு செஸ் ஒலிம்பியாட் குழுவில் இடம்பெற்றுள்ள 18 துறைச்சார்ந்த செயலர்களுடன் ஆய்வுகள் மேற்கொண்டார்.


Next Story