சுதந்திர தின விழா நடைபெறும் பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணி மும்முரம்


சுதந்திர தின விழா நடைபெறும் பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணி மும்முரம்
x

சுதந்திர தின விழா நடைபெறும் பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 15-ந்தேதி நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் கொண்டாடப்படுகிறது. மேலும் அன்றைய தினம் போலீசார் அணிவகுப்பு, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும் விழாவில் கலெக்டர் இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்தும், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்கியும், பேசவுள்ளார். எனவே சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மைதானத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் மற்றும் புதர்களை அகற்றினர். மேலும் மேடு, பள்ளமான பகுதிகளில் மண்ணை கொட்டி சமம் செய்து சுதந்திர தின விழா நடைபெறுவதற்கு மைதானத்தை தயார்படுத்தி கொடுத்தனர்.


Next Story