கோவை சம்பவம் குறித்து இன்னும் ஆராய வேண்டும் - கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்


கோவை சம்பவம் குறித்து இன்னும் ஆராய வேண்டும் - கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்
x

கோவை சம்பவம் குறித்து இன்னும் ஆராய வேண்டும் என்று கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை செளந்தாரஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கோவையில் எல்லா இடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோவை என்றாலே பரபரப்பு என்று இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்.

கோவையில் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தான் ஆக வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையினை மத்திய அரசு ஏற்று என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தவிட்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு செயல் பட வேண்டும்.

கோவை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுத்து இருக்கின்றது. ஏன், இப்படி நடந்தது என்பதை காவல்துறை பார்க்க வேண்டும். என்.ஐ.ஏ. மட்டுமல்ல, தமிழ்நாடு காவல் துறையும், கோவை சம்பவத்தில் கவனமுடன் இருந்து இருக்க வேண்டும். கோவையில் பரபரப்பான நிகழ்வுகள் நிகழாமல், அமைதியான இடமாக இருக்க வேண்டும்.

கோவையில் நடந்த சம்பவம் முதலில் கார் கேஸ் சிலிண்டர் என்று மேலோட்டமாக கூறப்பட்டது. பின்னர் அது வேறு விதமாக மாறியது. ஒருத்தர் மேல கவனத்தை செலுத்தாமல் முற்றிலும் பாதுகாப்பை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

பந்த் நடத்துவது என்பது போராட்ட வழிமுறை. இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, எதிர்ப்பை தெரிவிக்க நடத்துவது தான் பந்த். கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. கோவை அமைதியான நிலையில் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் முறை தான் பந்த். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story