மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்த கலெக்டர்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தோவாளை தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்த கலெக்டர்

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்,

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலக கிடங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை காலாண்டுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று காலையில் கலெக்டர் ஸ்ரீதர், அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் தோவாளை தாலுகா தாசில்தார் வினைதீர்த்தான், தேர்தல் தனி தாசில்தார் சுசீலா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.



Next Story