மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்தனர். இதில் 125 பேர் கைது செய்யப்பட்டனர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக விலைவாசி உயர்வு பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, வேலையின்மை, இந்தி திணிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசலில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் கோபால், சிவகங்கை நகரச் செயலாளர் மருது, நகரத் துணை செயலாளர்கள் சகாயம், பாண்டி, மாதர் சங்க அமைப்பாளர்கள் குஞ்சரம் காசிநாதன், ஈஸ்வரி, சாரதா, சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் மெஞ்ஞானமூர்த்தி, வேலு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட 71 பெண்கள் உள்பட 125 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.