காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, பாலக்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வடிவேல், பொது குழு உறுப்பினர் நரேந்திரன், நகர தலைவர் வேடியப்பன், மகளிர் அணி தலைவர் காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் மனித உரிமை மீறல் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில முதல்-அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் வட்டார தலைவர்கள் மணி, காமராஜ், ஞானசேகர், வெங்கடாசலம், சந்திரசேகர். சிறுபான்மை பிரிவு தலைவர் முபாரக், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சிவலிங்கம், விவசாயி அணி தலைவர் மணிகண்டன். நிர்வாகிகள் தங்கவேல், தளபதி செந்தில், கோவிந்தசாமி, அக்ரி ரங்கநாதன், ஹரிகிருஷ்ணன், கணபதி, சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு
இதேபோல் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் மூத்த நிர்வாகிகள் சீதாராமன், கிருஷ்ணன், முருகேசன், ராஜேந்திரன், ஊமையன் என்கிற சுப்ரமணி, மாக்கன், வக்கீல் வேணுகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மத்திய அரசை கண்டித்தம் கோஷங்கள் எழுப்பினர்.






