காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய, மாநில பா.ஜனதா அரசை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மாநில துணை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி மணிப்பூரில் நிகழ்ந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story