காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்


காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்
x

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிலையத்தில் மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து, ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், கலவரத்திற்கு முழு பொறுப்பேற்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.கே.குப்புசாமி, உத்தமன், சால்வை மோகன், மோகன சுப்ரமணியம், நாகேஷ், முருகன், ராமதாஸ், வெங்கடேசன், பிரகாஷ், சங்கர், பாஸ்கர், காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story