கிரேன் உதவியுடன் ஆழித்தேரின் கட்டுமான பணி மும்முரம்


கிரேன் உதவியுடன் ஆழித்தேரின் கட்டுமான பணி மும்முரம்
x

கிரேன் உதவியுடன் ஆழித்தேரின் கட்டுமான பணி மும்முரம்

திருவாரூர்

வருகிற ஏப்ரல் 1-ந் தேதி தேரோட்டம் நடக்க உள்ளதால் கிரேன் உதவியுடன் ஆழித்தேரின் கட்டுமான பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிறப்பு மிக்க இந்த கோவிலின் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான தேரோட்டம் விழாவிற்கான பந்தல்கால் முகூர்த்தம் தைப்பூச நாளில் நடந்தது. இதற்கான கொடியேற்றம் மார்ச் 9-ந்தேதி நடக்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து ஆழித்தேருக்கான கண்ணாடி கூண்டு பிரிக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

போக்குவரத்து மாற்றம்

நேற்று கிரேன் உதவியுடன் ஆழித்தேரின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அப்போது இரும்பு தூண்களை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதனால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் கீழவீதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்கு பதில் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்து போலீசார் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் திருவாரூர் நகர போலீசார் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story