அசல் ஆவணங்களை வழங்க மறுத்த நிதி நிறுவனம் முன்பு தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி


அசல் ஆவணங்களை வழங்க மறுத்த நிதி நிறுவனம் முன்பு தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி
x

வீட்டு கடன் செலுத்தியும் அசல் ஆவணங்களை வழங்க மறுத்த நிதி நிறுவனம் முன்பு தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கல்லூரை சேர்ந்தவர் அருள் (வயது 36). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், அருள் தனது வீட்டு கடனை அசல் மற்றும் வட்டியுடன் முழுவதுமாக கடந்த மாதம் செலுத்திவிட்டு தனது அசல் ஆவணங்களை கேட்டுள்ளார்.

ஆனால், நிதி நிறுவன வங்கி மேலாளர் உள்ளிட்டோர் அசல் ஆவணங்களை வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த அருள், தனது மனைவி கீர்த்தனாவுடன் (30) சம்பந்தப்பட்ட நிதி நிறுவன வங்கி முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு பெட்ரோலுடன் வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் அருள் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story