வீட்டிற்குள் கிரேன் புகுந்தது


வீட்டிற்குள் கிரேன் புகுந்தது
x

புதுக்கோட்டையில் வீட்டிற்குள் கிரேன் புகுந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஒரு அம்மன் கோவிலில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன் ஒன்று மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு திடீரென நகர்ந்து சென்றது. இதில் ஒரு வீட்டிற்குள் அந்த கிரேனின் மேல் பகுதி புகுந்தது. இதனால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அந்த வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் சேதமடைந்தது. இதையடுத்து, விபத்தில் சேதமடைந்ததை சரி செய்து தருவதாக கிரேன் உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட வீட்டின் நபர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் சமாதானம் ஏற்பட்டது.

1 More update

Next Story