வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணை நிரம்பியது


வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணை நிரம்பியது
x
தினத்தந்தி 1 Jun 2022 7:30 PM GMT (Updated: 1 Jun 2022 7:31 PM GMT)

வத்தமலை அடிவாரத்தில் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் வத்தல் மலையில் சின்னங்காடு, பால் சிலம்பு, பெரியூர் உள்ளிட்ட 13 மலை கிராமங்கள் உள்ளன. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால் வத்தல் மலையில் இருந்து அடிவாரத்திற்கு மழைநீர் கரை புரண்டு ஓடியது. மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணை நிரம்பியது. அதிலிருந்து தண்ணீர் வழிந்து கால்வாயில் ஓடுகிறது. இதனால் இந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.


Next Story