சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:00 AM GMT (Updated: 14 Oct 2023 12:00 AM GMT)

கம்பம்மெட்டு மலைப்பாதையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

தமிழகம், கேரளாவை இணைக்கும் முக்கியமான மலைப்பாதையாக கம்பம்மெட்டு விளங்குகிறது. கம்பம்மெட்டு மலை அடிவாரப்பகுதியில் இருந்து 7 கிமீ தூரம் உள்ள மலைப்பாதையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதையில் தினமும் விவசாய மற்றும் வணிக ரீதியாக சுமார் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களும், கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஜீப்களில் ஏலக்காய் தோட்ட கூலி தொழிலாளர்களும் சென்று வருகின்றனர். கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது.

மலைப்பாதை என்பதால் சாலைகள் அடிக்கடி சேதம் அடையும், சேதம் அடையும் சாலைகளை நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் சேதம் அடைந்து வருகின்றன. அதன்படி கம்பம்மெட்டு மலைப்பாதையில் 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


Next Story