தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 30 Nov 2023 3:36 AM GMT (Updated: 30 Nov 2023 3:46 AM GMT)

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்து வரும் 4 தினங்களுக்கு (இன்று முதல் 3-ந் தேதி வரை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story