நாய்கள் கடித்ததால் மான் செத்தது


நாய்கள் கடித்ததால் மான் செத்தது
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே நாய்கள் கடித்ததால் மான் செத்தது

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தையொட்டி மகரூர் காப்புக்காடு அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் மான்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் வந்து செல்வது வழக்கம். அதன்படி விவசாய நிலத்துக்கு வந்த பெண் புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்தன. இதில் படுகாயம் அடைந்த மான் எஸ்.ஒகையூர் ஓம் சக்தி கோவில் அருகே விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மானுக்கு தண்ணீர் கொடுத்தனர். இருப்பினும் அந்த மான் பரிதாபமாக செத்தது. இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை வனச்சரக காவலர் சகாதேவன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மேலும் எஸ்.ஒகையூர் கால்நடை மருத்துவர்(பொறுப்பு) சுகம் தலைமையில் மருத்துவ குழுவினர் இறந்து போன மானின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் இறந்த மானை மகரூர் காப்பு காட்டுப்பகுதியில் வனத்துறையினர் புதைத்தனர்.

1 More update

Next Story