மரக்கிளையில் சிக்கி மான் சாவு


மரக்கிளையில் சிக்கி மான் சாவு
x

மரக்கிளையில் சிக்கி மான் செத்தது.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், வெளிப்பிரிங்கியம் வனப்பகுதியில் உள்ள ஒரு மரக்கிளை இடையே ஒரு மான் சிக்கி இறந்த நிலையில் காணப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அரியலூர் வனத்துறை அதிகாரி முத்துமணி, வனத்துறை காப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த மானை கைப்பற்றினர். பின்னர் கீழப்பழுவூர் கால்நடை மருத்துவர் உதவியுடன், அந்த மானை உடற்கூறு பரிசோதனை செய்து, பின்னர் மானை வனப்பகுதியில் புதைத்தனர்.

1 More update

Next Story