போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- மக்கள் கல்வி கூட்டு இயக்கம் வலியுறுத்தல்


போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- மக்கள் கல்வி கூட்டு இயக்கம் வலியுறுத்தல்
x

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கல்வி கூட்டு இயக்கம் வலியுறுத்தியது.

மதுரை


மக்கள் கல்வி கூட்டு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசுப்பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, கம்ப்யூட்டர், நெசவு, தையல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 10 வருடங்களுக்கு முன்பு அரசு விதிகளின்படி முறையாக பணி நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனத்தின் போது 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 12 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அரசு விதிகளின்படி வாரத்தில் 3½ நாட்கள் மட்டும் பள்ளிக்கு வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், வாரத்தின் எல்லா நாட்களிலும் பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியப்பணியை முழுமையாக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதேபோல, கடந்த 14 வருடங்களாக பணியாற்றி வரும் சுமார் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் வழிமுறைகளை மேற்கொண்டு வருவதை மக்கள் கல்வி கூட்டு இயக்கம் கண்டிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story