திருவள்ளூரில் வீடு வீடாக சென்று தேசியக்கொடி ஏற்றி வைத்த மாவட்ட கலெக்டர்

திருவள்ளூரில் வீடு வீடாக சென்று தேசியக்கொடி ஏற்றி வைத்த மாவட்ட கலெக்டர்
x

சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் இன்று முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர்:

சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் இன்று முதல் 15 ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நகராட்சி நிர்வாகம், ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்திற்கு அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடி வழங்குமாறு உத்தரவிட்டது.

இதன்படி திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 14 ஆயிரத்து 237 வீடுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் தேசிய கொடியை இலவசமாக வழங்கினார்.

இன்று காலை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அரசு அலுவலர்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது வீட்டில் கொடி கட்டாத வீடுகளை கண்டறிந்து அந்த வீட்டுக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

Next Story