மாவட்ட கலெக்டர் தலையிட்டுவிசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்:இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்


மாவட்ட கலெக்டர் தலையிட்டுவிசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்:இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Jan 2023 6:45 PM GMT (Updated: 7 Jan 2023 6:46 PM GMT)

விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சினையில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தினர்.

தேனி

கோரிக்கை மனு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். அவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆண்டிப்பட்டி வட்டார பகுதியில் உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சண்முகசுந்தரபுரம், கொப்பையன்பட்டி ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2018-ம் ஆண்டு போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் தான் தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

கலெக்டர் தலையீடு

2020-ம் ஆண்டு போடப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை கொரோனா தொற்று காரணமாக ஊதிய உயர்வு கொடுக்க மறுத்து விட்டனர். அதையும் தாங்கிக் கொண்டு தான் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வந்தனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.500-க்கு விற்ற சமையல் கியாஸ் சிலிண்டர் தற்போது ரூ.1,200 வரை விலை உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

எனவே, இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, கூலி உயர்வு, 20 சதவீத போனஸ், தொழிலாளர் வருகை பதிவேடு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதி, தேசிய விடுமுறை நாட்களில் சம்பளத்துடன் விடுப்பு, விபத்து உதவி, பஞ்சப்படி போன்ற அடிப்படையான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story