வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.1½ லட்சம் நகை, லேப்டாப் திருட்டு


வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.1½ லட்சம் நகை, லேப்டாப் திருட்டு
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, லேப்டாப் திருடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, லேப்டாப் திருடப்பட்டுள்ளது.

வந்தவாசியை அடுத்த அண்ணா நகர் கீழ் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி உமாமகேஸ்வரி, தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக தற்காலிக ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் காலை சுமார் 9.30 மணிக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியபின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

மாலை அவர் வீட்டில் வேலை செய்யும் சத்யா நகரைச் சேர்ந்த சித்ரா என்பவர் மின்விளக்கு சுவிட்சை போடுவதற்காக போட வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்கம் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்ததோடு வெளியே உள்ள கேட் பூட்டப்பட்டிருந்தது.

சந்தேகம் சித்ரா, தெள்ளாரில் பணிபுரியும் உமாமகேஸ்வரிக்கு தெரிவித்தார். உமாமகேஸ்வரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகை, லேப்டாப் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து பொன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் வந்தவாசியை அடுத்த எரமலூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி காந்திமதி (வயது 58). இவர் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வேர்க்கடலை அறுவடைக்காக விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார்.

மாலையில் வீடு திரும்பியபோது கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து வந்தவாசி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

=======


Next Story