குடிநீர் ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
குடிநீர் ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது
சிவகங்கை
சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரத்து 970, தூய்மை பணியாளர்களுக்கு ரூ.13 ஆயிரத்து 800, தூய்மை காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஊராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊராட்சியில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆபரேட்டர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் வீரையா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சேதுராமன், பொதுச்செயலர் முருகானந்தம், மாவட்ட துணை தலைவர் உமாநாத், பொதுச்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேங்கையா, பொருளாளர் செய்யது முகம்மது, அண்ணாதுரை, ரமேஷ், வெள்ளைச்சாமி, ஜெயக்குமார், தங்கமணி, ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.