ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி


ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 62), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவரது ஆட்டோவை கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜாகீர் பெரிய அம்மாபாளையத்தைச் சேர்ந்த முஜிபூர் ரகுமான் (வயது 26) என்பவர் வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதியில் ஆட்டோவில் முஜிபூர் ரகுமான் சென்று கொண்டிருந்தார். ஒரு வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் இருந்து முஜிபூர் ரகுமான் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் விரைந்து வந்து முஜிபூர் ரகுமான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்துஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story