தொழிலதிபர் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை


தொழிலதிபர் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 26 Jun 2023 2:33 AM IST (Updated: 27 Jun 2023 2:05 PM IST)
t-max-icont-min-icon

தொழிலதிபர் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர்

திருச்சி

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய் சிட்டியில் வசித்து வருபவர் வீரசக்தி. பிரபல தொழிலதிபரான இவர் தில்லைநகரில் உணவகம் நடத்தி வருவதுடன், நிதி நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக உள்ளார். அந்த நிதி நிறுவனம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக, இவர் உள்பட சிலர் மீது போலீஸ் நிலையத்தில் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் தில்லைநகரில் உள்ள இவருடைய அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, அங்கிருந்து நிதி நிறுவனம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். வீரசக்தி, கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதிமய்யம் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story