சால்னா கேட்டதற்கு தர மறுத்த ஊழியர்...கடையை நொறுக்கிய கும்பல் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
சால்னா கேட்டதற்கு தர மறுத்ததால் கடையை அடித்து நொறுக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள காந்தி சாலை பகுதியில் அசைவக உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, இளைஞர்கள் சிலர் கும்பலாக வந்து பரோட்டா வாங்கிய நிலையில், கடை ஊழியர்களிடம் கூடுதலாக சால்னா கேட்டுள்ளனர்.
இதற்கு ஊழியர்கள் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த இளைஞர்கள், ஊழியரை தாக்கி கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், அடையாளம் தெரியாத இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story