சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டை அணிந்து வேலை செய்த பணியாளர்கள்
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டையை அணிந்து பணியாளர்கள் வேலை செய்தனர்.
சிவகங்கை
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்ைட அணிந்து பணிபுரிந்தனர். முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர் நலச் சங்கத்தின் சார்பில் ஊதிய உயர்வை உறுதி செய்ய வேண்டும். நியாயமான அடிப்படை ஊதிய உயர்வை நிர்ணயிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி கால வரை ஊதியம் வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் ஏற்கனவே பணிபுரிந்த. தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிய உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிந்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story