மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி பஸ் டிரைவர் குடும்பமே பலியான சோகம்
செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்யாறு
செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நெகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பஸ்சில் டிரைவர். இவர் காஞ்சீபுரத்தில் வசித்து வந்தார். இவரது மனைவி ஞானபிரியா (35). இவர்களது மகள் திலக்சனா (6).
நேற்று முன்தினம் ரமேஷ் மனைவி, மகளுடன் ேமாட்டார்சைக்கிளில் நெகனூருக்கு சென்றார். பின்னர் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் வந்தவாசி வழியாக காஞ்சீபுரத்துககு திரும்பிக்கொண்டிருந்தனர்.
தேத்துறை கிராமத்தின் அருகே சென்ற போது காஞ்சீபுரத்திலிருந்து எதிரே புதுச்சேரி நோக்கிச்சென்ற அரசு பஸ் ரமேஷ் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் ரமேஷ் மற்றும் அவரது மகள் திலக்சனா ஆகியோர் அந்த இடத்திலேயே இறந்து விட்டனர். தகவலறிந்த அனக்காவூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த ஞானபிரியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்து ரமேஷின் தம்பி பார்த்திபன் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான பஸ் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் இறந்த 3 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அரசு பஸ் டிரைவர் மனைவி, மகளுடன் வந்தபோது மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ்சே மோதி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.