கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியானார்.
திருவண்ணாமலை
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியானார்.
திருவண்ணாமலை தாலுகா கஸ்தாம்பாடி அருகில் உள்ள கிளாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). விவசாயி. நேற்று முன்தினம் அவர் அந்தப் பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை இந்த நிலையில் நேற்று காலை அவரது உறவினர் வெங்கடேசனை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது அவர் அங்கிருந்த கிணற்றில் பிணமாக மிதந்தார். இது குறித்து மங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்த வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெங்கடேசன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.