கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்


கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவிலில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல் டீக்கடை நடத்திய வாலிபர் கைது

கடலூர்

காட்டுமன்னார்கோவில்

புவனகிரி ஆர்.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் சிவச்சந்திரன்(வயது 27). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டுமன்னார்கோவில் ஓமாம்புலியூர் மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வந்தார். அப்போது அவருக்கும் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த விவசாயியான சங்கர்(54) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சிவச்சந்திரன், டீக்கடையில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, சங்கரிடம் ரூ.13 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்ற சிவச்சந்திரன் அதன்பிறகு டீக்கடையை நடத்தாமல் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிவச்சந்திரன் காட்டுமன்னார்கோவில் மேலவீதி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சங்கர், சிவச்சந்திரனை பார்த்ததுடன், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சங்கருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். . இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிந்து, சிவசந்திரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story