மீனவர்கள்-விசைப்படகை மீட்டுத்தர வேண்டும்


மீனவர்கள்-விசைப்படகை மீட்டுத்தர வேண்டும்
x

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்-விசைப்படகை மீட்டுத்தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகை கீச்சாங்குப்பம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு சொந்தமான விசைப்படகில் அரசு மீன்பிடி அனுமதி பெற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடித்து கொண்டு வருகிறோம். இந்நிலையில் கடந்த 28-ந்தேதி அய்யநாதன் (வயது 45), பிரதீப் (48), ஜெயந்தன் (35), குப்புராஜ் (50), தமிழ்மணி (50) ஆகிய 5 மீனவர்கள் கோடியக்கரைக்கு தெற்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை விசைப்படகு மற்றும் மீனவர்களை சிறைபிடித்து சென்றது. எனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகு மற்றும் மீனவர்களை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story