அடிக்கல் நாட்டு விழா


அடிக்கல் நாட்டு விழா
x

கரையாபாலையூர் ஊராட்சியில் மடப்புரம் - பாக்கம் இணைப்பு பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருவாரூர்

கொரடாச்சேரி ஒன்றியம் கரையாபாலையூர் ஊராட்சியில் பாக்கம் - கரையாபாலையூர் - கட்டளை கல்லுக்குடி, பூங்காவூர் - ஆரிபாவூர் - நெய்குப்பை மடப்புரம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.790.40 லட்சம் மதிப்பீட்டில் 116.24 மீட்டர் நீளத்திற்கு வெட்டாற்றின் குறுக்கே மடப்புரம் - பாக்கம் இணைப்பு பாலம் கட்டப்பட உள்ளது. புதிதாக கட்டப்பட உள்ள மடப்புரம் - பாக்கம் இணைப்பு பாலம் அடிக்கல் நாட்டு விழா கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதற்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொறுப்பு) வடிவேல், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், செயற்பொறியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் மகாதேவன், ஊராட்சி மன்றத்தலைவர் மீனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story