ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா


ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
x

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடியில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், பேரூர் செயலாளர் நஜிமுதீன், ஒன்றிய செயலாளர்கள் ஆறு.செல்வராஜன், வெங்கட்ராமன் தமிழ்மாறன், வேளாண்மை துறை இணை இயக்குனர் தனபாலன், உதவி இயக்குனர் ரவிசங்கர், வேளாண்மை துறை அலுவலர் காவியா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை, வேளாண்மை செயற்பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர் இந்திரா, ஆவின் கூட்டுறவு தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊர்காவலன், சாந்தி, இளையான்குடி தாசில்தார் அசோக்குமார், இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், பேரூராட்சி தலைவர் செய்யது ஜமிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story