அடிக்கல் நாட்டு விழா


அடிக்கல் நாட்டு விழா
x

வள்ளியூரில் வட்டார கல்வி அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் கலையரங்கு தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலகத்திற்கு 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள், வட்டார கல்வி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story