ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசித் திட்டம் பாதிக்காது - அமைச்சர் ஐ.பெரியசாமி


ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசித் திட்டம் பாதிக்காது - அமைச்சர் ஐ.பெரியசாமி
x

ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசித் திட்டம் பாதிக்காது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மத்திய அரசு இலவசங்களுக்கு தடை விதிப்பால் தமிழகத்தில் ரேஷன் கடையில் வழங்கும் இலவச அரிசித் திட்டம் பாதிக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு வேண்டாம். இலவச அரிசித் திட்டம் பாதிக்காது. பொதுவாக பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் ரேஷன் அரிசி விதிமுறைகளுக்கு உட்படுத்தி எந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதை உணவுத் துறை அமைச்சர் மேற்கொள்வார்

தற்போது, பல்வேறு நெருக்கடிகளை சமாளித்தும் தமிழக மக்களுக்கான நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்து 10 ஆண்டாக கிடப்பில் இருந்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இன்னும் ஓரிரு நாட்களில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story