கடலூரில் ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்குகிறது


கடலூரில் ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் தொடங்குகிறது.

கடலூர்

ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் 6 ஆயிரத்து 553 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கும், 3 ஆயிரத்து 587 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வுக்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில், அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 9499055908 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது 2 பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story