மனைவியின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி வெட்டிய நண்பர் போலீசில் சரண்


தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:45 PM GMT)

கோவை அருகே பஸ் நிறுத்தத்தில் மனைவியின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி வெட்டிய தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்.

கோயம்புத்தூர்

கோவை அருகே பஸ் நிறுத்தத்தில் மனைவியின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி வெட்டிய தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓட ஓட விரட்டி வெட்டினார்

கோவையை அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் பஸ் நிறுத்தம் உள் ளது. இங்கு நேற்று காலை 11.30 மணி அளவில் பலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று கையில் அரிவாளுடன் பஸ் நிறுத்தத்தை நோக்கி வந்தார்.

அவரை பார்த்ததும் அங்கிருந்த நபர் ஒருவர் தப்பி ஓட தொடங் கினார். ஆனாலும் அந்த வாலிபர் விடாமல் அவரை ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டினார். இதை பார்த்து அங்கிருந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் சிலர் அரிவாளால் வெட்டப்பட்ட நபரை காப்பாற்ற திரண்டு வந்தனர்.

போலீசில் சரண்

அதை பார்த்ததும் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றார். காயம் அடைந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்ட கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற் கிடையே அந்த நபரை வெட்டிய வாலிபர் அரிவாளுடன் சென்று சூலூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

விசாரணையில் அவர் கோவைப்புதூரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சந்திரபிரகாஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் தொடர் விசாரணையில், அரிவாளால் வெட்டில் காயம் அடைந்தவர் ஆனந்த் (34) என்பதும், அவரும், சந்திரபிரகா சும் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.

அப்போது சந்திரபிரகாசின் மனைவிக்கும், ஆனந்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதனால் அவர்கள் 2 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தனியாக குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் சந்திரபிரகாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சந்திரபிரகாஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கள்ளக்காதல்

சந்திரபிரகாஷ் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சந்திரபிரகாசுடன், சுமை தூக்கும் தொழிலாளியாக ஆனந்த் என்பவர் வேலை செய்து வந்தார். இதனால் அவர்கள் நண்பர்கள் ஆனார்கள்.

இந்த நிலையில் ஆனந்த்துக்கும், சந்திரபிரகாசின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் சந்திரபிரகாஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்கள் 2 பேரும் உல்லாசமாக இருந்தனர். இதை சந்திரபிரகாஷ் கண்டித்ததால் அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

அரிவாளால் வெட்டினார்

தனது நண்பனே தனக்கு துரோகம் செய்ததால் சந்திரபிரகாஷ் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில்தான் ஆனந்த், பாப்பம் பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக சந்திரபிரகாசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் சந்திரபிரகாஷ் அரிவாளுடன் சென்று ஆனந்த்தை ஓட ஓட விரட்டி வெட்டி விட்டு சரண் அடைந்தார்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.

கோவை அருகே பட்டப்பகலில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story