வகுப்பறையின் முகப்பு சுவரில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது
வேதாரண்யம் அருகே அரசு பள்ளி வகுப்பறையின் முகப்பு சுவரில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே ஆதனூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 82 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பழமை வாய்ந்த இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று பெய்த மழையில், பழமைவாய்ந்த அந்த வகுப்பறை கட்டிடத்தின் முகப்பு பகுதியில் உள்ள சுவரின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. அதையடுத்து இந்த பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டிடங்கள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story