குப்பை கிடங்கு தீப்பிடித்தது


குப்பை கிடங்கு தீப்பிடித்தது
x
தினத்தந்தி 29 Jun 2022 4:06 PM GMT (Updated: 29 Jun 2022 4:07 PM GMT)

வீரபாண்டி அருகே குப்பை கிடங்கு தீப்பிடித்தது.

தேனி

அல்லிநகரம் நகராட்சி மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உப்பார்பட்டி விலக்கு-தப்புகுண்டு சாலையில் அரசு சட்டக்கல்லூரி அருகே அமைந்துள்ளது. இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளது. தினமும் பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் கடந்த 16-ந்தேதி யாரோ மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. அதில் பற்றிய தீ காற்றில் வேகமாக பரவி அருகே உள்ள விளைநிலங்களில் சுமார் 7 ஏக்கரில் பயிரிட்டிருந்த பச்சைமிளகாய், முருங்கை மரங்கள் எரிந்து கருகி நாசமாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தேனி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story