கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது
விருத்தாலசத்தில் வீட்டில் சமையல் செய்த போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த தொரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி வள்ளி. இவர் நேற்று வழக்கம்போல், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
அதே நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட முருகன், சிலிண்டரை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து, அதன் மீது ஈரமான சாக்கு போட்டும். தண்ணீரை ஊற்றியும் தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story