ஓபிஎஸ் பாதிக்கப்படுவார் என்ற நோக்கில் பொதுக்குழு உறுப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளார்- ஈபிஎஸ் தரப்பு வாதம்
ஓபிஎஸ் பாதிப்படைவார் என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அவ்வாறு தொடர முடியாது என ஈபிஎஸ் தரப்பு வாதன் முன் வைக்கப்பட்டது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு விசாரணை தொடங்கியது. மேல் முறையீடானது நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகினர். அதில் அவர்கள் கூறியதாவது:-
* விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகத்திற்கு எந்த வகையில் பாதிப்பு என நிரூபிக்கவில்லை.
* ஓபிஎஸ் பாதிக்கப்படுவார் என்ற நோக்கில் பொதுக்குழு உறுப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவ்வாறு வழக்கு தொடர முடியாது.
* கட்சி விதிகளை திருத்தினால் உறுப்பினருக்கு என்ன பாதிப்பு என நிரூபிக்கவில்லை.
* 23 வரைவு தீர்மானங்கள் உருவாக்கப்பட்டதாக கூறுவதே தவறு.
* 23 வரைவு தீர்மானங்கள் ஊருவாக்கப்பட்டதாக கூறுவது தவறு என்ற ஈபிஎஸ் தரப்பு வாதத்திற்கு ஓபிஎஸ் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
* அஜெண்டா இல்லாமல் பொதுக்குழுவை எப்படி நடத்துவீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
* கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அஜெண்டா கொடுப்பதே இல்லை என ஈபிஎஸ் தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது.
* பொதுக்குழுவில் என்ன நடக்க போகிறது என்பதை உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
* எழுதப்படாத தீர்மானங்கள் எதுவும் வைத்துள்ளீர்களா? என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
* எழுதப்படாதது என என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் பொதுக்குழுவில் புதிதாக எழுதப்படுமான என கூற முடியாது என ஈபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.
* எழுதப்படாத செயல் திட்டம் இல்லாத போது கூட்டத்தில் விவாதிக்கலாம். ஆனால் தீர்மானமாக நிறைவேற்றக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
* பொதுக்குழுவில் எடுக்கும் முடிவை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஏன் முன் கூட்டியே தெரிவிக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
* பொதுக்குழு உறுப்பினர்கள் தான் முடிவு எடுப்பார்கள். யூகத்தின் அடிப்படையில் முடிவுக்கு வரக்கூடாது என ஈபிஎஸ் தரப்பில் வாதன் முன் வைக்கப்பட்டது.