சிறுமி மாயம்

சிறுமி மாயமானார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், கோப்பிலியன்குடிகாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்துடன் ரமேஷ் அயன் ஆத்தூரில் வசித்து வருகிறார். ரமேஷின் மூத்த மகள் சரண்யா (வயது 18), ஆனந்தாவாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்த இவர், வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதியன்று சரண்யாவை காணவில்லை. இதையடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் சரண்யா கிடைக்கவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீசில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிந்து மாயமான சரண்யாவை தேடி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





