பாம்பு கடித்து சிறுமி பலி
பாம்பு கடித்து சிறுமி பலியானாள்.
காரைக்குடி, பாம்பு கடித்து சிறுமி பலியானாள்.
காரைக்குடி சேர்வார் ஊருணி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு ஓவியா (வயது 10) என்ற மகள் இருந்தாள். ஓவியா அருகில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.. சம்ப வத்தன்று இரவு செல்வமணி வெளியே சென்றிருந்தார். வீட்டில் அமுதாவும், ஓவியாவும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது ஓவியா திடீரென படுக்கையிலிருந்து எழுந்து தனது தாயிடம் என்னை ஏதோ கடித்துவிட்டது என்று கூறி அழுதார். உடனே அமுதா எழுந்து பார்த்தபோது ஓவியாவின் படுக்கையிலிருந்து பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமுதா உடனடியாக தனது மகளை காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். .அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஓவியா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.