சிறுமி பாலியல் பலாத்காரம்
ஆனைமலை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
காதல்
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது டிரைவருடன், அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் நேரில் சந்தித்தும், செல்போன் மூலம் பேசியும் கடந்த 5 மாதங்களாக தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
பலாத்காரம்
இதையடுத்து அந்த டிரைவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக தெரிகிறது.
கைது
இதற்கிடையில் அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியும், டிரைவர் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி கூறினார். அவர்கள், வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அந்த டிரைவரை கைது செய்தனர்.