சிறுமிக்கு பாலியல் தொல்லை


சிறுமிக்கு பாலியல் தொல்லை
x

முத்துப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த எடையூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 47). இவர் எடையூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், செல்லத்துரை 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், எடையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீமான், முத்துப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் செல்லத்துரை மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை கிளை சிறையில் அடைத்தனர்.








Next Story