சிறுமிக்கு பாலியல் தொல்லை


சிறுமிக்கு பாலியல் தொல்லை
x

எருமப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் ஊராட்சி கஸ்தூர்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி துறையூர்அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் 12-ந் தேதி அன்று இரவு மகளை காணவில்லை என பெற்றோர் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளிலும் தேடி பார்த்தனர். பின்னர் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அலங்காநத்தம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த சந்திரகுமார் மகன் கவுதம் (வயது 21) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story