லாரி மீது மோதிய அரசு பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது


லாரி மீது மோதிய அரசு பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது
x

லாரி மீது மோதிய அரசு பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது.

திருச்சி

துவாக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்திரம் பஸ் நிலையம் நோக்கி நேற்று அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காட்டூர் சோதனைச்சாவடி அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரி திடீரென பிரேக் பிடித்து நிறுத்தப்பட்டது. இதனால் அரசு பஸ், லாரியின் பின்னால் மோதியது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவரும், பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பஸ்சையும், டிப்பர் லாரியையும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story