உயிர் பிரியும் கடைசி நொடியில் பல உயிர்களை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்..!


உயிர் பிரியும் கடைசி நொடியில் பல உயிர்களை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்..!
x

அரசு பஸ் டிரைவர் பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து பஸ்சை பூட்டியிருந்த கடை மீது மோதி நிறுத்தியுள்ளார்.

திருச்சி

ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை மணப்பாறையைச் சேர்ந்த கணபதி என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் கணபதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பஸ்சின் வேகத்தைக் கட்டுப்படுத்திய கணபதி, அதனை பூட்டியிருந்த கடை மீது இடித்து நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து பொதுமக்கள் கணபதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

பணியில் இருந்த போது மாரடைப்பு வந்த நேரத்திலும் பயணிகளை காப்பாற்றுவதற்காக அரசு பஸ் டிரைவர், பூட்டியிருந்த கடை மீது பஸ்சை மோதி நிறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story